நான் முத்துவேல். ஒரு தனியார் வங்கியில் பணிபுரிகிறேன்.என் மகன் மு.ருத்ரன் பிறந்தபோது, அவனது இடது கண் ஏன் சிறிதாக இருக்கிறதென்று
கேட்ட போது மருத்துவர்கள், இதன் பெயர் microphthalmia, PHPV என்று சொன்னபோது, அழகான பெயர்கள் என்று
நினைத்துக்கொண்டேன. என்ன சிகிச்சை என்று கேட்டபோது, கையை விரித்து மேல்நோக்கிக் காட்டியபோதுதான் புரிந்தது. என் மகனின் உலகம் பிறந்ததுமே சுருங்கி விட்டதென்று.
அவனது இடது கண்ணில் பார்வை வர வாய்ப்பில்லை என்பதும், அது மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் இருக்கவும், வலது கண்ணின் பார்வை நிலைக்கவும் தொடர் சிகிச்சை அவசியம் என்பதும் மருத்துவர்களின் அறிவுரை.
மூன்று மாதங்கள் கழித்து வரச் சொல்லியிருக்கிறார்கள்.
"இன்று போய் நாளை வா" என்று, காலம் என்னிடம் சொன்னது போல் இருந்தது.
"விழி மேல் விழி" வைத்துக் காத்திருக்கிறேன்.
No comments:
Post a Comment